11th July 2024 18:09:52 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் 10 ஜூலை 2024 அன்று 4 வது இலங்கை பீரங்கி படையணி விரிவுரை மண்டபத்தில் தொடர் விரிவுரைகளை நடத்தியது. 1 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி கட்டளை அதிகாரியான மேஜர் வீஎன்எம் ஜயசேகர யூஎஸ்பீ எல்எஸ்சி அவர்கள் அமர்வை நடத்தினார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், நிதி மோசடி, போதைப்பொருள் பயன்பாடு/கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம், கற்பழிப்பு மற்றும் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகள் நடாத்தப்பட்டன.
இந்த விரிவுரையில் பனாகொட இராணுவக் வளாகத்தின் 20 அதிகாரிகளும், 160 இராணுவ சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.