Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th June 2024 08:52:25 Hours

மேற்கு பாதுகாப்பு படையினரால் அபேக்ஷா மருத்துவமனைக்கு ஆதரவளிக்கும் வகையில் பிண்டபாத யாத்திரை

இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வண. யோத கண்டிய ஆரியவங்ச தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை நோயாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 2024 ஜூன் 20 ஆம் திகதி பிண்டபாத யாத்திரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியிடம், வண. யோத கண்டிய ஆரியவங்ச தேரர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்த யாத்திரையின் நிர்வாக நடவடிக்கையில் 50 படையினர் கலந்துகொண்டனர். எமது கூட்டு முயற்சியின் அடையாளமான பிண்டபாத யாத்திரை இராணுவ போதிராஜாராம ஆலயத்தில் ஆரம்பமாகி ஹோமாகமவில் நிறைவடைந்தது. இதன் விளைவாக, மஹரகம, அபேக்ஷா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஐந்து மில்லியன் பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை பிக்குகளால் வழங்க முடிந்தது.