Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2023 09:00:25 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி சவால் கிண்ண போட்டி வெற்றிகரமாக நிறைவு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரால் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்விற்கு இணையாக 'தளபதியின் சவால் கிண்ண' கரப்பந்து போட்டி – 2023 மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால்புஸ்ஸல்ல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதிப் போட்டி திங்கட்கிழமை ஏப்ரல் 03 பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைப்பிரிவுகள் மற்றும் பிரிகேட்டுகள் உட்பட பத்து அணிகள் இரண்டு தொகுதிகளின் கீழ் போட்டியிட்டன. அதனடிப்படையில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அணி மற்றும் 143 வது காலாட் பிரிகேட் அணி இறுதிப் போட்டியை எதிர்கொண்டன. ஆரம்ப போட்டிகள் 2023 மார்ச் 27 முதல் 29 வரை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதி போட்டியில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக அணி 143 வது காலாட் பிரிகேட் அணியை மூன்று சுற்றுகளில் தோற்கடித்தது. இப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பார்வையாளர்கள் கலந்து கொண்டார்.அவர்களின் சிறப்பான திறமைகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட பின்வரும் வீரர்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் பங்குபற்றுதலுடன் பின்னர் விருது வழங்கப்படவுள்ளது.

போட்டியின் சிறந்த வீரர்: லான்ஸ் கோப்ரல் டி.எச்.எஸ் தேவிந்த - மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம்

சிறந்த அறைதல் வீரர்: லான்ஸ் கோப்ரல் பிஎச்ஐயு மதுஷன் – 143 வது காலாட் பிரிகேட்

சிறந்த அமைப்பாளர்: லான்ஸ் கோப்ரல் பிவிஆர் சந்தருவன் - மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம்

சிறந்த லிபரோ: சிப்பாய் எம். சத்துரங்க - மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம்