Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th January 2024 13:35:10 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினருக்கு 'கணக்காய்வு தவறுகளை குறைத்தல்' தொடர்பான விரிவுரை

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினருக்கு பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் ‘கணக்காய்வு தவறுகளை குறைத்தல்’ என்ற தலைப்பிலான விரிவுரை புதன்கிழமை (ஜனவரி 24) நடாத்தப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த விரிவுரை ஏற்பாடு செய்யப்பட்டது.

உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தின் மேஜர் டப்ளியூஜீஜேஎம்டிஎஸ் ஜயசிங்க மற்றும் லெப்டினன் எச்.பீ.ஆர்.ரணசிங்க ஆகியோர் அமர்வை நடத்தியதுடன், 53 அதிகாரிகள் மற்றும் 354 சிப்பாய்கள் விரிவுரையில் பங்கேற்றனர்.