Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2023 17:25:33 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக அனைத்து நிறுவனங்களிலும் 'வெசாக்' பண்டிகை

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 142 வது காலாட் பிரிகேட்டின் 7 வது (தொ) கஜபா படையணியின் படையினர் 'வெசாக்' தினத்தை முன்னிட்டு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்தை மே 4 அன்று சுத்தம் செய்ததுடன், 142 வது காலாட் பிரிகேட் படையினருடன் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பிரதேசங்களில் வெசாக் அலங்காரங்களையும் முன்னெடுத்தனர்.

142 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டலின் கீழ் வெசாக் தினத்திற்கு முன்னதாக பொரளையில் இருந்து நுகேகொட வரையிலான வீதியை பௌத்த கொடிகள் மற்றும் வெசாக் கூடுகளால் அலங்கரிக்க பொதுமக்களுடன் படையினர் இணைந்து கொண்டனர்.

61 வது காலாட் படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேடின் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர், மாத்தறை பிரதேசத்தில் வசிப்பவர்களுடன் இணைந்து, மாத்தறை மீகதயா விகாரை வளாகத்தில் 'சிரமதான' பணிகளை மேற்கொண்டனர். 04 மே 2023 அன்று 613 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியினால் இந்த திட்டம் மேற்பார்வையிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.

மேலும், 141 வது காலாட் பிரிகேடின் 6 வது கள இலங்கை பீரங்கி படையணியின் படையினர் 05 மே 2023 அன்று வெயங்கொடை பகுதியில் உள்ள பக்தர்களுக்காக வெயங்கொடை முகாம் வளாகத்திற்கு அருகில் ‘மரவள்ளிக் கிழங்கு தானம்’ ஒன்றை வழங்கினர்.

16 வது கஜபா படையணி மற்றும் 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கூட்டு முயற்சியால் 2023 மே 05 அன்று புத்தளம் செல்லகந்தவத்தை 143 வது காலாட் பிரிகேட் தலைமையகத்திற்கு அருகில் மற்றொரு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த திட்டம் 143 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் கட்டளை அதிகாரிகளினால் மேற்பார்வையிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 14 மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகளின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.