27th May 2024 17:43:46 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் கட்டளையின் கீழ் ஸ்ரீ களனி ரஜமஹா விகாரை இளைஞர் அமைப்பின் அனுசரணையுடன் களனி ரஜமஹா விகாரையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
2024 மே 23 மற்றும் 24 ஆகிய திகதியில் அன்னதான நிகழ்வு நடத்தப்பட்டது, சுமார் 20,000 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 14 வது காலாட் படைபிரிவின் தளபதி மற்றும் 144 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் இந் நிகழ்வை மேற்பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.