Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th January 2025 19:07:24 Hours

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் தொற்று நோய்கள் குறித்த விரிவுரை

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் அதன் பயிற்சி நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக "தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை 2025 ஜனவரி 8 அன்று 4 வது இலங்கை பீரங்கிப் படையணியில் ஏற்பாடு செய்தது.

இந்த விரிவுரை மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.

2 வது (தொ) இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் கேப்டன் கே.ஜி.டி.ஆர். டி சில்வா அவர்கள் எச்.ஐ.வீ/எய்ட்ஸ், இன்ப்ளூயன்ஸா, டெங்கு, நியுமோனியா மற்றும் சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்று நோய்களின் பரவல், தடுப்பு மற்றும் சிகிச்சை போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்.

இவ் விரிவுரையில் ஆறு அதிகாரிகள் மற்றும் 176 சிப்பாய்கள் பங்குபற்றினர்.