Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd June 2024 19:00:45 Hours

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி 61 வது படைப்பிரிவு டயனர்ஸ் கழகத்திற்கு ஊக்குவிப்பு

61 வது காலாட் படைப்பிரிவு 28 மே 2024 அன்று பூஸ்ஸவில் உள்ள இலங்கை இலேசாயத காலாட் படையணி விருந்து மண்டபத்தில் உணவருந்தும் சங்க நிகழ்வை நடத்தியது. மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ எம்பீல் அவர்களால் 'தொழில்முறை மற்றும் புத்திஜீவித்துவத்தின் ஊடாக இராணுவ மூலோபாயத் தலைமைத்துவம்' என்ற தலைப்பில் அறிவுமிக்க விரிவுரை வழங்கப்பட்டது.

61 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, அதிகாரிகளின் அறிவு மற்றும் நம்பிக்கையை அவர்களின் கடமைகளுக்கு மத்தியில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் அறிவுமிக்க விரிவுரையானது, இராணுவத் தலைமையின் அறிவுசார் வளர்ச்சியுடன் தொழில்முறையை இணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

இந்நிகழ்வில் 61 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் உட்பட 77 அதிகாரிகள் கலந்துகொண்டனர்.