25th April 2023 18:01:20 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 143 வது காலாட் பிரிகேட் மற்றும் 16 வது கஜபா படையணி படையினரின் ஒருங்கிணைப்பில் கடந்த சனிக்கிழமை (22) கருவலகஸ்வெவ தப்போவ புராண ரஜமஹா விகாரை வளாகத்தில் கிராமத்தைச் சேர்ந்த 50 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறார்களுக்கும் இந் நன்கொடைகள் வழங்கப்பட்டன.
மேஜர் ஜெனரல் திலக்வீரகோன் (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ், திருமதி உதயனி முனசிங்க மற்றும் அவரது நண்பர்களின் அனுசரணையில் படையினர் அப்பகுதியிலுள்ள 50 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் போஷாக்கு பொதிகள், உடைகள் மற்றும் குழந்தைப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கியதுடன் அக் குடும்பற்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கினர்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் 14வது வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎம்ஆர்என்கே ஜயமான்ன ஆர்டபிள்யூபீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎம்எப் கிச்சிலன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த நன்கொடை திட்டத்தை கருவலகஸ்வெவ தப்போவ புராதன ரஜமஹா விகாரையின் பிக்குகளுடன் கலந்தாலோசித்து ஏற்பாடு செய்தார். இந் நன்கொடைக்காக ரூ. 500,000/= செலவிடப்பட்டது.
இந் நிகழ்வில் பங்கேற்பாளர்களுக்கு சுவையான மதிய உணவை வழங்க படையினர் ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்வில் பயனாளிகளுடன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அனுசரணையாளர்கள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.