13th February 2022 21:50:25 Hours
கட்டனா டொயோ குஷன் லங்கா தனியார் நிறுவன தொழிற்சாலையில் அதிகாலை ஏற்பட்ட தீயை அணைக்க 141 வது காலாட் பிரிகேடின் 6 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 2 (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படையினர் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 12) உடனடியாக தங்களின் உதவிகளை வழங்கினர்.
அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் 60 பேர் நீர்கொழும்பு தீயணைப்பு மீட்புப் பிரிவினர், இலங்கை - கட்டுநாயக்க விமானப்படை தீயணைப்புப் பிரிவினர் மற்றும் சிலாபம் தீயணைப்புப் பிரிகேடினர் இணைந்து சுமார் 8 மணிநேரப் போராட்டத்தின் பின்னர் முற்றாகக் பரவிய தீயை அணைத்து கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 14 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் ஜயமான்ன, 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பந்துல காரியவசம் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் படையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.