Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th July 2023 22:34:57 Hours

மேற்கு படையினரால் சூறாவளி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கை

6 வது இலங்கை கள பீரங்கிப் படையணி, 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த சுமார் 60 சிப்பாய்களின் ஒத்துழைப்புடன் ஜூலை 06 அன்று அதிக மழை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுகள், குப்பைகளை அகற்றுதல், மரங்கள் விழுந்து சேதமடைந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை சரிசெய்தல், போன்ற மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

திவுலபிட்டிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாகொன்ன, கடவல, ஹல்கஹவெலவத்த, கட்டுவெல்லேகம, பொபுகம்மன மற்றும் பலுகஹவெல ஆகிய பகுதிகளில் அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் சூறாவளியினால் 73 வீடுகள் மற்றும் இரண்டு விகாரைகள் சேதமடைந்துள்ளன.

இராணுவப் படையினர், அனர்த்த முகாமைத்துவ நிலையம் உட்பட பல்வேறு அரச நிறுவனங்களுடன் இணைந்து, மறுநாள் (ஜூலை 06) வரை 24 மணி நேரமும் உழைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் நிவாரணங்களை வழங்கி இயல்புநிலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 14 வது காலாட் படைப்பிரிவு தளபதி மற்றும் 141 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் இணைந்து நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டனர்.