Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th July 2023 20:03:06 Hours

மேற்கு படையினரால் கல்தோட்டை கொங்கஹ மன்கடவில் பரவிய தீ அணைப்பு

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 61 வது காலாட்படை பிரிவின் 611 வது காலாட் பிரிகேடின் 8 வது கெமுனு ஹேவா படையணி படையினர் கல்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொங்கமங்கட பகுதியில் காலை வேளையில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக வேகமாகப் பரவிய காட்டுத் தீயை சனிக்கிழமை (22 ஜூலை 2023) அன்று அணைத்துள்ளனர்.

குறித்த அவசர நிலை தொடர்பில் கல்தோட்டை பிரதேச செயலாளர் இராணுவத்தினரின் உதவியை நாடியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவ படையினர் இரண்டு மணி நேரத்திற்குள் தீ பரவாமல் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர்.

மேற்குப் பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் கட்டளையின்படி 611 வது பிரிகேட் தளபதி மற்றும் 8 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி பணியை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.