27th August 2024 19:29:56 Hours
இராணுவ காற்பந்து குழுவின் தலைவர், மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜீ அவர்கள் நேபாளத்தின் லலித்பூரில் 2024 ஆகஸ்ட் 18 முதல் 28 வரை நடைபெற்ற தெற்காசிய காற்பந்து போட்டியின் போது 20 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய காற்பந்து அணியின் பொறுப்பதிகாரியாக பணியாற்றினார்.
போட்டி முழுவதும் அணியை வழிநடத்துவதில் அவரது தலைமை முக்கியமானது. சர்வதேச அரங்கில் நெகிழ்வு மற்றும் திறமையை வெளிப்படுத்திய 20 வயதுக்குட்பட்ட தேசிய அணி தற்போது நாடு திரும்பியுள்ளது.