Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st February 2023 20:10:45 Hours

முள்ளிவாய்க்கால் கரையோரப் பகுதி 6 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினரால் சுத்தம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் 682 வது காலாட் பிரிகேடின் 6 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினர், சனிக்கிழமை (பெப்ரவரி 18) முள்ளிவாய்க்கால் கரையோரப் பகுதியைச் சுத்தப்படுத்தினர்.

6 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் டி.எம்.டி.எஸ் திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஓர் அதிகாரி மற்றும் 10 சிப்பாய்களுடன் இணைந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பகுதி 1 கிமீ நீள கடற்கரைப் பகுதியாகும். 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும மற்றும் 682 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கலப்பத்தி ஆகியோர் இத்திட்டத்திற்கு தமது ஆசிகளை வழங்கினர்.