18th May 2023 22:20:57 Hours
முல்லைத்தீவு உடையார்கட்டு மகாவித்தியாலயம் மற்றும் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலையைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்களுக்கு மே 15 - 16 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் ‘சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுத்தல்’ தொடர்பான விழிப்புணர்வு விரிவுரை நடாத்தப்பட்டது.
68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரி முதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் கருத்தின் அடிப்படையில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு அதிகாரி திரு. எம்எம்பீபிஎம் ரஷாட் அவர்களால் இவ்விரிவுரை நிகழ்த்தப்பட்டது.
விரிவுரையில் பாதகமான விளைவுகள், சட்டவிரோத பொருட்கள், ஆபத்தான போதை மருந்துகளின் வகைகள், அவற்றின் விளைவுகள், பயன்பாடுகள் மற்றும் பின்விளைவுகளின் தாக்கம் தொடர்பாக விரிவுரை வழங்கப்பட்டது.
681 மற்றும் 682 வது காலாட் பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், 6 வது கெமுனு ஹேவா படையணி, 3 வது விஜயபாகு காலாட் படையணி, 6 மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் இவ்விரிவுரைக்கான வசதிகளை ஏற்பாடு செய்தனர்.
முல்லைத்தீவு வலயக் கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் - அலுவலகத்தின் திரு.கே வைகுயினரூபன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.