19th April 2023 20:30:14 Hours
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் 28 சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் பரிசுப் பொதிகளை வழங்கினர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி, அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சிவில் ஊழியர்கள் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி அந்த பரிசுப் பொதிகளை வழங்கினார்.
ஒவ்வொரு பயனாளிக்கும் 6000 ரூபாய் மதிப்புள்ள உலர் உணவு பொதிகள், உடைகள் என்பன வழங்கப்பட்டன. விநியோக நிகழ்ச்சிக்குப் பிறகு, வருகை தந்தவர்களை மகிழ்விக்கும் வகையில் இசை நிகழ்வும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.