Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th April 2023 18:20:00 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சமாந்தரமாக ஏனைய அமைப்புகளில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை சனிக்கிழமை (22) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் பிரதேச மக்கள் மற்றும் படையினர் இணைந்து கொண்டாடியது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ மற்றும் இலங்கை இராணுவ மகளீர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர ஆகியோர் அன்றைய நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கயிறு இழுத்தல், ‘அவுருதுகுமாரி’ (புத்தாண்டு இளவரசி) தேர்வு, யானைக்கு கண் வைத்தல், பனிஸ் சாப்பிடுதல், தலையானை சண்டை, பானை உடைத்தல், தென்னோலை பின்னல், தேங்காய் துருவல், இசை நாற்காலி,பலூன் உடைத்தல்,சாக்கு ஓட்டம் ,தேசிக்காய் சமனிலை ஓட்டம், விநோத உடைப்போட்டி, மற்றும் பல சிங்கள மற்றும் தமிழ் பாரம்பரிய அம்சங்கள் நிகழ்வை வண்ணமயமாக்கின.

பின்னர் மாலை, அதே இடத்தில் ஏஜீயுஎஸ் வர்த்தக நிறுவனம், மெல்வா கம்பெனி லிமிடெட், மாலிபன் பிஸ்கட் கம்பெனி லிமிடெட் மற்றும் முல்லைத்தீவில் உள்ள சுகுமாலி ஜூவலரி ஆகியவற்றின் கூட்டு அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்வில் அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 15,000 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் மாலை முழுவதும் வாணவேடிக்கை, பண்டிகை நிகழ்வுக்கு அழகையும் வண்ணத்தையும் சேர்த்தது.

முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர், படைப் பிரிவின் தளபதிகள், முல்லைத்தீவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும், நன்கொடை நிறுவனங்களின் பிரதிநிதிகள் அன்றைய விழாவில் பங்கேற்றனர்.