Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2023 06:00:02 Hours

முல்லைத்தீவு தளபதி மென்பந்து கிரிகெட் மற்றும் பூப்பந்து போட்டி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் கருத்தின்படி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ‘தளபதி கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டி மற்றும் பூப்பந்துப் போட்டிகள்’ நடைபெற்றன.

59, 64, 68 வது காலாட் படைப்பிரிவுகள் மற்றும் முன்னரங்க பராமரிப்புப் பகுதியின் படையினரின் பங்குபற்றுதலுடன் கிரிகெட் போட்டி 07 டிசம்பர் 2023 முதல் 10 டிசம்பர் 2023 வரை நடைபெற்றது. போட்டியின் இறுதிப் போட்டி 12 டிசம்பர் 2023 அன்று 64 மற்றும் 68 வது காலாட் படைபிரிவு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில், 64 வது காலாட் படைப்பிரிவு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இரண்டாம் இடத்தை 68 வது காலாட் படைப்பிரிவு அணி பெற்றது.

மேலும் அதிகாரிகள் பூப்பந்து போட்டி 09 டிசம்பர் 2023 மற்றும் 10 டிசம்பர் 2023 ல் நடத்தப்பட்டது. முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இறுதி நாளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.