Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2025 10:55:56 Hours

முல்லைத்தீவில் பாடசாலை பொருட்கள் மற்றும் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

59 வது காலாட் படைப்பிரிவு, இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாச்சார நிலையத்துடன் இணைந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில், எளிய மாணவர்களின் கல்விப் பயணத்தை ஆதரிக்கும் வகையில் உதவித்தொகை மற்றும் அத்தியாவசிய பாடசாலைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வு 2025 ஜனவரி 12 ஆம் திகதி 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சீ. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வு, இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாசார, நிலையத்தின் செயலாளர் வண. மீகஹதென்ன சந்திரசிறி தேரரின் தலைமையில், 59 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது. இந்த நிகழ்வு 593 வது காலாட் பிரிகேடின் பதில் தளபதி மற்றும் 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கே.என்.சி. டி சில்வா ஆகியோரின் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, முல்லைத்தீவைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செயல்திறனை அங்கீகரித்து, மாதாந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.

மேலும், வரவிருக்கும் பாடசாலை ஆண்டுக்கு போதுமான எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர்களும் வழங்கப்பட்டன.

இந்த முயற்சி மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர உதவுவதை நோக்கமாகக் கொண்டதுடன், அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையை குறைப்பதாகவும் காணப்பட்டது.

இந்த நிகழ்வு ஆதரவை எடுத்துக் காட்டியதுடன், பௌத்த பிக்குகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களின் பங்கேற்புடன் அலங்கரிக்கப்பட்டது.