Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2023 21:37:46 Hours

முல்லைத்தீவில் ஆதரவற்ற குடும்பத்திற்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு

643 காலாட் பிரிகேட் படையினருடன் 8வது இலங்கை பீரங்கி படையணியின் படையினர் இணைந்து குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர். வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 13) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் முன்னிலையில் வீடு கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவ தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியியல் கட்டுமான நோக்கங்களுக்காக அனைத்து மூலப்பொருட்களையும் இலவசமாக வழங்குவதற்கு அனுசரனையாளர்கள் உதவிகளை வழங்கினர்.

முல்லைத்தீவு ஜீவநகரில் தொழில் இல்லாத தந்தையான திரு கே ராஜா தனது மனைவி மற்றும் ஊனமுற்ற இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் பரிதாப நிலையை கிராம சேவை அதிகாரியினால் படையினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இக் குடும்பம் சரியான பாதுகாப்பு இல்லாமல் சுகாதார பாதுகாப்பு இல்லாமல் குடிசையில் வாழ்ந்து வருகின்றதை கருத்திற் கொண்டு 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி எம்எஸ் தேவப்ரியா யுஎஸ்பீ என்டிசி அவர்கள் மற்றும் 643 காலாட் பிரிகேட் தளபதி சி டி விக்கிரமநாயக்க டப்ளியுவீ ஆர்எஸ்பீ அவர்கள் வழிக்காட்டலின் கீழ் படையினர் இந்த கட்டுமானப் பணிகளை முன்னெடுத்தனர்.

இத் திட்டம் 8 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் அவரது படையினரால் குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டது. மேலும், வீடு முழுவதுமாக அலங்காரம் செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும், வீடு திறப்பு விழாவின் போது பரிசாக வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 641, 642 மற்றும் 643 வது பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள், மேஜர் டி.எஸ் பொஹரன் (ஓய்வு), சிப்பாய்கள், பயனாளியின் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.