14th October 2023 17:31:00 Hours
முல்லைத்தீவு நிர்வாக உத்தியோகத்தர் சங்கம் தனது ஆங்குரார்பாண கூட்டம் 591 வது காலாட் பிரிகேடில் வியாழக்கிழமை (ஒக்டோபர் 05) அப்பகுதியில் சேவையாற்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் பங்குபற்றலுடன் நடைப்பெற்றது.
முல்லைத்தீவு நிர்வாக உத்தியோகத்தர் சங்கம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் கருத்தாக்கத்தின்படி முல்லைத்தீவு மாவட்டத்தின் நிறைவேற்று நிலை அரச துறை அதிகாரிகளின் அரங்கை வழங்கும் நோக்கத்துடன், 'ஒன்றாகச் சேர்ந்து மேலும் சாதிப்போம்' என்ற தொனிப்பொருளில் ஒரு சிறந்த அரசு சேவையை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியுடன் தொடர்பு, தோழமை உறவுகள் மற்றும் குழுப்பணிக்காக உருவாக்கப்பட்டது.
59 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மற்றும் கேணல் எச்கேபீ கருணாதிலக்க ஆர்எஸ்பீ ஆகியோர் இத்திட்டத்தினை மேற்பார்வையிட்டதுடன் அங்குரார்பண கூட்டத்தை தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
பாரம்பரிய மங்கள விளக்கை ஏற்றி அன்றைய நிகழ்ச்சி நிரலின் தொடக்கத்தைக் குறித்ததுடன் முதலில் 59 வது காலாட்படைப் பிரிவின் தளபதி பார்வையாளர்களுக்கு கருத்து மற்றும் முல்லைத்தீவு நிர்வாக உத்தியோகத்தர் சங்கத்திற்கு முன்னோக்கி செல்லும் வழி குறித்து விளக்கினார். அதன்பின்னர் பொலிஷார், கலால், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் வனத்துறையின் பிரதிநிதிகள் கூட்டத்தினருக்கு விழிப்புணர்வு அமர்வுகளை நடத்தியதுடன் பின்னர் அவர்கள் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடிய பின்னர் சுமுகமான உரையாடலை முடித்தனர். பங்கேற்பாளர்கள் அப்பகுதியில் இராணுவத்தின் தற்போதைய சமூகப் பணிகளை மிகவும் பாராட்டினர் மற்றும் இந்த முயற்சியை ஏற்பாடு செய்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு.ஏ.உமாமகேஸ்வரன் அவர்கள் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு இறுதி உரையை நிகழ்த்தி முப்படையினருக்கு நன்றி கூறினார். முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உட்பட அறுபத்தி ஒன்பது நிறைவேற்று அதிகாரிகள் இந்த புதிய முயற்சியில் பங்குகொண்டனர்.