07th August 2023 20:40:06 Hours
பாடசாலைச் சூழலின் தரத்தை உயர்த்தும் நோக்கில் முதலாவது இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 04) இயக்கச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் சிரமதானப்பணியை மேற்கொண்டனர்.
மாணவர்களின் நலன் கருதி பாடசாலை வளாகத்தில் சுகாதார கேடு விளைவிக்கும் குப்பைகளை அகற்றும் வகையில் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இப்பணியில் கலந்து கொண்டனர்.
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 522 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் முதலாவது இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இப்பணி மேற் கொள்ளப்பட்டது.