Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2024 15:19:27 Hours

முதலாம் படையில் அங்கம்பொர பயிற்சி பாடநெறி நிறைவு

முதலாம் படை, இராணுவ அங்கம்பொர கழகத்துடன் இணைந்து, தனது முதல் அங்கம்பொர பயிற்சி பாடநெறியை 2024 பெப்ரவரி 16 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவு செய்தது.

முதலாம் படையின் தளபதியும் இராணுவ அங்கம்பொர கழகத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 50 படையினர் பாடநெறியில் பங்கு பற்றினர். இப்பாடநெறி பாரம்பரிய தற்காப்பு நுட்பங்கள், தைரியம், நெகிழ்ச்சி, உடல் தகுதி போன்றவற்றை மேம்படுத்துதல் மற்றும் சித்தப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

பாடநெறியின் நிறைவில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் பிரதம அதிதியாக முதலாம் படைத் தளபதி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.