Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th February 2024 18:34:38 Hours

முதலாம் படையினால் அடிப்படை உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி

முதலாம் படை தலைமையகம் 28 பெப்ரவரி 2024 அன்று முதலாம் படை தலைமையக வளாகத்தில் ஒரு நாள் அடிப்படை உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி பட்டறையை நடத்தியது. முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த நிகழ்வு அவசரகால சூழ்நிலைகளைக் கையாள்வதில் அத்தியாவசிய திறன்களைக் கொண்ட பணியாளர்களை தயார் படுத்தலை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி இராணுவத் தள வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினால் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில், கோட்பாட்டு அறிவு மற்றும் நடைமுறைச் செயல் விளக்கங்கள் ஆகிய இரண்டும் வழங்கப்பட்டன. 22 அதிகாரிகள் மற்றும் 103 சிப்பாய்கள் இந்த பயிற்சி பட்டறையில் முக்கிய தருணங்களில் உதவி வழங்குவது குறித்த விரிவான பயிற்சியைப் பெற்றனர்.