Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2023 18:30:48 Hours

முதலாம் படையணி தலைமையகம் அதன் கட்டளை அமைப்புகளுக்கு ‘தர்ம’ பிரசங்கம்

கிளிநொச்சி முதலாம் படையணி தலைமையகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) கிளிநொச் "நெலும்பியச" கேட்போர் கூடத்தில் முதலாம் படை தலைமையகம் மற்றும் அதன் கட்டளை அமைப்புகளில் சேவையாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் மனநலம் மற்றும் நேர்மையை மேம்படுத்தும் நோக்குடன் 'தர்ம' பிரசங்கத்தை ஏற்பாடு செய்திருந்தது.

மன நலம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த மத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

முதலாம் படையணி தளபதியும் பொதுப்பணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டப்ளியூ டப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணியாளர்களின் உதவியுடன் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டடது.

இந்த சிறப்பான நிகழ்வுக்கு தேவையான ஏற்பாடுகளை முதலாம் படையணி தலைமையக படையினர் மற்றும் அதனுடன் இணைந்த வழங்கல் பிரிவுகளினால் முறையாக ஏற்பாடுசெய்யப்பட்டது.

பலாங்கொடை சீலசமஹித ஆரண்ய செனாசானயத்தின் ‘அம தோர விவரவிய’ சதஹம் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் பிரதம புரவலருமான வணக்கத்துக்குரிய பலாங்கொடை ரத தேரர் அவர்கள் படை வீரர்களுக்கு பிரசங்கத்தை நடாத்தியதுடன், வீரமரணம் அடைந்த அனைத்து போர்வீரர்களின் ஆத்மா சாந்திக்கும் சேவையாற்றியவர்களின் நலனுக்கும் சிறப்பு ஆசிர்வாதம் வழங்கினார்.

இந் நிகழ்வில் முதலாம் படையணி தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் டப்ளியூபீடப்ளியூ சீ பெரேரா, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.