07th August 2023 20:45:36 Hours
முதலாம் படை தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 58 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ டிடபிள்யூஜி இஹலகே ஆர்டிபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலில் முதலாம் படை படையினர் பௌர்ணமி தினத்தில் அனுராதபுரம் ருவன்வெலி மகா சேயாவிற்கு முன்பாக 'தானம்' வழங்கினர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் மத அனுஷ்டானங்களில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பால் சாதம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.
58 வது காலாட் படைப்பிரிவின் படையினரின் விருந்தோம்பலில் ஏராளமான பக்தர்கள் உண்டு மகிழ்ந்தனர்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.