Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2024 17:28:03 Hours

முதலாம் படை அதிகாரிகளுக்கு நடைமுறை நிகழ்வுகள் தொடர்பில் விரிவுரை

முதலாம் படை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புதன்கிழமை (ஜனவரி 31) யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் முதலாம் படை அதனுடன் இணைந்த படையலகுகளில் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு நடைமுறை விடயங்கள் தொடர்பிலான விரிவுரை 1 ம் படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, இலங்கை ரூபவாஹினி “சிவ்தேச” நிகழ்ச்சியின் விளையாட்டுப் பணிப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான திரு.விஜய திசாநாயக்க அவர்கள் ‘புதிய உலக ஒழுங்கின் கருத்தாக்கமும் அதன் தாக்கங்களும்’ என்ற தலைப்பில் அமர்வை நடத்தினார்.

இறுதியில், முதலாம் படை தளபதி நிறுவனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, சிறப்பு நினைவு சின்னத்தை விரிவுரையாளருக்கு வழங்கினார்.