23rd April 2025 13:07:41 Hours
சமீபத்திய இடம் பெற்ற அனர்த்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரகால மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க இலங்கையிலிருந்து ஒரு விசேட முப்படைகளின் குழு மியான்மருக்கு சென்றடைந்துள்ளது. இலங்கையின் மனிதாபிமான உதவி அனர்த்த நிவாரணக் குழு 2025 ஏப்ரல் 05, அன்று யாங்கோன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதை தொடர்ந்து யாங்கோனுக்கு வடக்கே சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட நேபிடாவ் மாகாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான காலகட்டத்தில் கள நிலைமையை மதிப்பிடுவது, அத்தியாவசிய மருத்துவ சேவையை வழங்குவது மற்றும் சுகாதார உட் கட்டமைப்பை ஆதரிப்பதே குழுவின் உடனடி தேவையாகும். திறமையான நிபுணர்கள் மற்றும் துணைப் பணியாளர்களைக் கொண்ட இந்தக் குழு தற்போது நேபிடாவில் நிறுத்தப்பட்டு அங்கு அவசரகால நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
அவர்களின் பணியின் ஒரு பகுதியாக, இந்தக் குழு போப்ப திரி நகரத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளது, அங்கு அவர்கள் இரண்டு நடமாடும் மருத்துவ மருத்துவமனைகளை நடத்துவார்கள். இந்த மருத்துவமனைகள் அவசர சிகிச்சையை வழங்குவதையும், அந்தப் பகுதியின் சுகாதார கண்காணிப்பு மதிப்பீட்டை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
அதிக தேவை உள்ள மண்டலங்களுக்கு உதவி வழங்குவதுடன் ஆதரவையும் திறம்பட வழங்குவதை உறுதி செய்வதற்காக மியான்மர் அதிகாரிகளுக்கும் இலங்கை நிவாரணக் குழுவிற்கும் இடையே ஒருங்கிணைப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமைய இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய சுகாதார உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கை மருத்துவக் குழுக்கள் 2025 ஏப்ரல் 09, அன்று பொப்பா திரி டவுன்ஷிப்பில் இரண்டு நடமாடும் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்தனர். முதல் மருத்துவ சோதனை நவதாய் இராணுவ குடும்பக் குடியிருப்பில் உள்ள ஐடிபீ மையத்தில் நடைபெற்றது. இதில் 84 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இரண்டாவது மருத்துவ சோதனை தம்ம பரமி பாலர் பாடசாலை ஐடிபீ மையத்தில், 42 நபர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
மியான்மார் மனிதாபிமான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இலங்கை மருத்துவக் குழு, கிய் டாங் கான் கிராமத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் (ஐடிபீ) நிலையங்களிலும், பொது சுகாதாரப் போக்குவரத்து மற்றும் நிர்வாகத் துறையிலும் 2025 ஏப்ரல் 09, அன்று ஒரு நடமாடும் மருத்துவ பரிசோதனையை முன்னெடுத்தனர். பொப்பா திரி டவுன்ஷிப்பில் மொத்தம் 132 நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழு, தேவையான சுகாதார உதவியை வழங்கியது. மாலை நேரங்களில் 44 நோயாளர்கள் சிகிச்சை பெற்றனர்.
இலங்கை மருத்துவக் குழுவினர் 2025 ஏப்ரல் 10, அன்று போப்பே திரி டவுன்ஷிப்பில் உள்ள வர்த்தக அமைச்சில், லாட் லோக் டவுன் பகோடா மற்றும் மஷிகானா நிலையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்கள் (ஐடிபீ) நிலையங்களில் மொத்தம் 164 நோயாளர்களுக்கு மூன்று நடமாடும் மருத்துவ சேவைகளை வழங்கினர்.
இதேபோல், இலங்கை மருத்துவக் குழு 2025 ஏப்ரல் 11, அன்று தாகு முகாம், நைரானா முகாம், யனா முகாம் மற்றும் சுபு திரி டவுன்ஷிப்பில் உள்ள டானா தீகிட்டி முகாம் ஆகிய இடங்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்கள் (ஐடிபீ) நிலையங்களில் மூன்று நடமாடும் மருத்துவ முகாம்களை நடாத்தியது.
மேலும், இலங்கை மருத்துவக் குழு 2025 ஏப்ரல் 12 ஆம் திகதி சுபா திரி டவுன்ஷிப், வுன்னா தீக்டியில் உள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்கள் நிலையங்களில் 68 நபர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவையை நடாத்தியது.
மனிதாபிமான முயற்சிகளின் தொடர்ச்சியாக, இலங்கை மருத்துவக் குழு 2025 ஏப்ரல் 13 ஆம் திகதி துக் தாத்தேயில் உள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் நிலையங்களிலும், சுபா திரி டவுன்ஷிப் வணிகக் கல்வி உயர்நிலைப் பாடசாலையிலும் 70 நபர்களுக்கு இரண்டு நடமாடும் மருத்துவ சேவையை நடாத்தியது.
தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டுவரும் இலங்கை மருத்துவக் குழு 2025 ஏப்ரல் 14 ஆம் திகதி சுபா திரி டவுன்ஷிப்பில் உள்ள தப்யகோன் அடிப்படைக் கல்வி உயர்நிலைப் பாடசலையில் அமைந்துள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் நிலையத்தில் 76 நபர்களுக்கு நடமாடும் மருத்து சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடாத்தியது.
மேலும், இலங்கை மருத்துவக் குழு 2025 ஏப்ரல் 15 ஆம் திகதி சுபா திரி டவுன்ஷிப்பில் உள்ள தாயர்கோகே மடாலயத்தில் அமைந்துள்ள உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர் நிலையத்தில் 144 நோயாளர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவையை வழங்கியது.
தங்கள் முயற்சியைத் தொடர்ந்து, இலங்கை மருத்துவக் குழு 2025 ஏப்ரல் 16, அன்று லூவ் டவுன்ஷிப்பி எண் 06 பொது சமூக மண்டபத்தில் அமைந்துள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்கள் (ஐடிபீ) மையத்தில் 75 நோயாளர்களுக்கு ஒரு நடமாடும் மருத்துவ சோதனையை நடத்தியது.
இதற்கிடையில், இலங்கை மருத்துவக் குழு 2025 ஏப்ரல் 17 அன்று தேய்கினாதிரி டவுன்ஷிப்பில் அமைந்துள்ள யான் அவுன் மைன் பகோடாவில் 130 நோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவ சேவையை நடாத்தியது.
மேலும், இலங்கை மருத்துவக் குழு 2025 ஏப்ரல் 18 ஆம் திகதி பைன்மனா டவுன்ஷிப்பில் உள்ள தபாங் அரங்கத்தில் 121 நோயாளிகளுக்கு நடமாடும் மருத்தவ சேவையை நடாத்தியது.
தங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை மருத்துவக் குழு 2025 ஏப்ரல் 19 ஆம் திகதி பைன்மனா டவுன்ஷிப்பில் உள்ள தபாங் அரங்கத்தில் 180 நோயாளிகளுக்கு நடமாடும் மருத்தவ சேவையை நடாத்தியது.
தங்கள் திட்டங்களை தொடரும் இலங்கை மருத்துவக் குழு 2025 ஏப்ரல் 20 ஆம் திகதி பைன்மனா டவுன்ஷிப்பில் உள்ள தபாங் அரங்கத்தில் 205 நோயாளிகளுக்கு ஒரு நடமாடும் மருத்துவ சேவை மற்றும் நன்கொடைத் திட்டத்தை நடாத்தியது.
இதனிடையே, இலங்கை மருத்துவக் குழுவினர் 2025 ஏப்ரல் 21 அன்று பைன்மனா டவுன்ஷிப்பில் உள்ள தபாங் அரங்கத்தில் 120 நோயாளர்களுக்கு நடமாடும் மருத்துவ சோதனையை நடத்தினர்.
தங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் இலங்கை மருத்துவக் குழுவினர் 2025 ஏப்ரல் 22 அன்று பைன்மனா டவுன்ஷிப்பில் அமைந்துள்ள தபாங் அரங்கத்தில் 110 நோயாளர்களுக்கு நடமாடும் மருத்துவ சோதனையை நடத்தினர்.
மேலும், இலங்கை மருத்துவக் குழுவினரால் 2025 ஏப்ரல் 23 அன்று பைன்மனா டவுன்ஷிப் தபாங் அரங்கத்தில் 146 நோயாளர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை மற்றும் நன்கொடை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.