Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th June 2023 21:11:38 Hours

மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் ஆயுத உதவி பாடநெறி நிறைவு

மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் 22 பெப்ரவரி 2023, முதல் 13 ஜூன் 2023 வரை நடைப்பெற்ற 29 அதிகாரிகளுக்கான படையலகு ஆயுத உதவி பாடநெறி இல - 84 (2023/I) சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவு பெற்றது.

செவ்வாய்க்கிழமை (13) படையலகு ஆயுத உதவி பாடநெறி தொடர்ந்தவர்களுக்கான இறுதிச் சான்றிதழ் மற்றும் சின்னங்கள் வழங்கும் நிகழ்வில் காலாட்படை பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி கேணல் எஸ்ஜேஎம்என்எஸ் பெரேரா யூஎஸ்பீ கலந்து கொண்டார்.

நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 29 அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த பாடநெறியானது அடிப்படை காலாட்படை ஆயுதங்கள் தொடர்பான விரிவுரைகள் மற்றும் நடைமுறை செயலமர்வுகளை உள்ளடக்கியிருந்தது. கஜபா படையணியின் லெப்டினன் கேஏஎஸ்ஏகே ஆராச்சி பாடநெறியின் சிறந்த மாணவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் முன் அன்றைய பிரதம விருந்தினர் நிறைவுரை ஆற்றினார். இந் நிகழ்வில் பயிற்றுவிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சி்ப்பாய்கள் கலந்து கொண்டனர்.