03rd June 2024 18:54:24 Hours
இளம் அதிகாரிகள் பாடநெறி - 64 (2024-11) மின்னேரியா காலாட் படை பயிற்சி நிலையத்தில் 2024 ஜூன் 02 அன்று காலாட் படை பயிற்சி நிலையத்தின் பயிற்சிப் பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் டி சூரியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் நிறைவு உரையுடன் நிறைவு பெற்றது.
இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 75 இளம் அதிகாரிகள் ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பாடநெறியில் கலந்து கொண்டனர். இப் பாடநெறியில் அடிப்படை காலாட் படை ஆயுதங்கள் தொடர்பான கோட்பாட்டு மற்றும் நடைமுறை பயிற்சிகள் இடம் பெற்றன.
பயிற்சியை நிறைசெய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் முன் கட்டளை அதிகாரி நிறைவுரை ஆற்றினார். இந்நிகழ்வில் பயிற்றுவிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.