Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2023 20:37:39 Hours

மினுஸ்மாவின் ஐ.நா. அதிகாரி வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பாளரை சந்திப்பு

ஐநா அதிகாரி திரு. அப்துல்லாயே டாஹிர் ஜிம்மி ரொட்ரிக் அவர்கள் இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எல்.எஸ்.டபிள்யூ. லியனகே யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களை திங்கட்கிழமை (ஓகஸ்ட் 28) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

திரு ஜிம்மி ரொட்ரிக், வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பாளருடனான தனது சந்திப்பின் போது, மாலியில் இலங்கை அமைதி காக்கும் படையின் படையினர்கள் தொடர்பான வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

மேலும், ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் பணியில் படையினரை நிலைநிறுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவு வழங்குவது தொடர்பாக பணிப்பாளர் கருத்து தெரிவித்தார்.

திரு ஜிம்மி ரோட்ரிக் சனிக்கிழமை (ஓகஸ்ட் 26) இலங்கைக்கு வந்தடைந்த அவர், 5வது மாலி இலங்கை அமைதி காக்கும் பணி குழு ஒருங்கிணைப்பாளராக இலங்கையிலிருந்து புதிய மாலி செல்லும் குழுவுடன் புறப்படுவார் என்பது குறிப்பிடதக்கதாகும்.