23rd July 2024 05:39:23 Hours
ஐ.நா மாலியில் உள்ள இலங்கை இராணுவ அமைதி காக்கும் படை குழுவில் சேவையாற்றும் இலங்கை இராணுவ அமைதி காக்கும் படைக்கு சம்பிரதாய பதக்கம் வழங்கும் அணிவகுப்பு 19 ஜூலை 2024 அன்று மாலியில் உள்ள காவோ சூப்பர் கேம்ப் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக ஐக்கிய நாடுகளின் பல பரிமானம் ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. அந்தோனி அந்தசிவ் அவர்கள் கலந்து கொண்டார். இந்த அணிவகுப்பின் போது 207 இலங்கை அமைதி காக்கும் படையினர் ஐ.நா மினுஸ்மா பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பிரதம விருந்தினர் அமைதி காக்கும் படையினரின் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டியதுடன், சவாலான நிலைமைகளுக்கு மத்தியில் அவர்களின் தைரியத்தையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் எடுத்துக்காட்டினார்.
இலங்கை கவச வாகனப் படையணியின் மேஜர் டி.எம்.டி. டி சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் அணிவகுப்புத் தளபதியாக கடமையாற்றினார். இலங்கை இராணுவ அமைதி காக்கும் படை தங்கள் பணியை முடித்துக் கொண்டு விரைவில் நாடு திரும்பவுள்ளனர்.