Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2023 15:03:26 Hours

மாலியில் இலங்கை அமைதி காக்கும் நான்கு படையினர் குண்டுவெடிப்பில் காயம்

மாலியில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலியில் ஐ.நா.வின் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு இலங்கை வீரர்கள், மினுஸ்மா (மாலி ஐ.நா பணி) மாலியில் ஞாயிற்றுக்கிழமை (21) குண்டு வெடித்ததில் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கை அமைதி காக்கும் படையினர் கவச வாகனத்தில், வழங்கல் வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்குகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

பழங்குடியினக் கலவரங்களால் சிதைந்த நிலப்பரப்பு நாடான மாலியின் கிடால் பகுதியில் உள்ள டெஸ்ஸாலிட்டில் அவர்களின் முகாமுக்கு வடமேற்கே சுமார் 15 கிமீ தொலைவில் வெடிப்பு ஏற்பட்டது. காயங்கள் பெரிதாக இல்லை என்றும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

மினுஸ்மா இலங்கைப் அமைதி காக்கும் படையின் கட்டளை அதிகாரி கேணல் ஜேஎம்டிஎன்சி ஜயமஹா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் கவச வாகனத்தில் இலங்கை படையினர் வீதியூடாக வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்கியபோது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கருத்து தெரிவிக்கையில் அதைத் தொடர்ந்து சுற்றியுள்ள பகுதியில் உடனடி தேடுதலில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் வெற்றிகரமாக தகர்த்தப்பட்டதுடன் டெஸ்ஸாலிட் முகாமுக்கு வடமேற்கே 23 கிமீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனமும் தகர்த்தப்பட்டதாகவும் அவர் பதிவு செய்திருந்தார்.

2022 இல் 14 பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் கடந்த ஒன்பது வருடங்களில் எந்தவொரு உலக அமைப்பின் பணிகளிலும் மினுஸ்மா பணி மிகவும் ஆபத்தானது என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐ.நா ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.