18th August 2023 18:57:33 Hours
மாலியில் 5வது இலங்கை அமைதிகாக்கும் படை குழு 2023 ஒகஸ்ட் 07 திங்கட்கிழமை ஆரம்ப பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து அவர்களின் முதல் வாகனத் தொடரணி நடவடிக்கையைத் தொடங்கியது.
ஐக்கிய நாட்டின் கிடல், அகுலோக் மற்றும் டெஸ்ஸாலிட் தளங்கள் மற்றும் மினுஸ்மாவின் ஏனைய முக்கிய நிறுவல்களுக்கு வழங்கல் நடவடிக்கைகளை வழங்குவதற்கான ஆரம்ப பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாமகோவில் உள்ள படைத் தலைமையகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 228 சிவிலியன் வழங்கல் வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
செயல்பாட்டின் போது 577 கிமீ மொத்த தூரத்தை 19 கவசப் வாகனங்கள் மற்றும் 17 இராணுவத் தற்காப்பு டிரக்குகள் பயன்படுத்தப்பட்டன. 18 அதிகாரிகள் மற்றும் 141 வீரர்கள் காவோ சூப்பர் முகாம் முதல் டெஸ்ஸாலிட் வரையிலான சவாலான சூழலில் நடவடிக்கை மற்றும் ஏனைய பாதுகாப்பு கடமைகளில் பங்கேற்றனர்.