02nd April 2024 15:00:14 Hours
2024 ம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இலங்கை அமைதி காக்கும் படையின் உபகரணங்களின் ஆய்வு 26 மார்ச் 2024 அன்று மாலி காவோ சூப்பர் முகாமில் ஐநா அதிகாரிகளின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.
படையினர்களுக்காக நாட்டில் வழங்கப்படும் முக்கிய உபகரணங்கள் ஐநா தரநிலைகளின்படி மேற்கொள்ளப்படுகிறதா என்பதை சரிபார்க்க பாதுகாப்பு உபகரணங்கள் ஆய்வு, வழங்கல் ஆய்வு, மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வின் போது, வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், மருத்துவம், தங்குமிடம், நலன்புரி வசதிகள் மற்றும் அனைத்து உபகரணங்களும் புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளின்படி உள்ளனவா என ஐ.நா ஆய்வுக் குழுவால் சரிபார்க்கப்பட்டன.