19th December 2023 22:34:37 Hours
மாலியில் உள்ள 5 வது இலங்கை இராணுவ அமைதி காக்கும் படை குழு ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த ஸ்திரப்படுத்தல் பணியின் வழிகாட்டுதலின்படி வரைவு செயல்முறையின் ஒரு பகுதியாக மாலி காவோ சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியினை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) வெற்றிகரமாக நிறைவுசெய்தனர்.
இலங்கை இராணுவ அமைதி காக்கும் படை குழுவின் தளபதி கேணல் டப்ளியு.டப்ளியு.என்.பீ விக்ரமாராச்சி அவர்கள் மாலி பாதுகாப்புப் படையின் சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் காவோ சர்வதேச விமான நிலைய பாதுகாப்புப் பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக மாலி பாதுகாப்பு படையிடம் ஒப்படைத்தார்.
2023 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாலியில் இருந்து ஐநா அமைதி காக்கும் நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டதால், அந்தந்த படையினர் பங்களிக்கும் நாடுகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி, படையினர், உபகரணங்கள் மற்றும் கவச வாகனங்களை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பத் தொடங்கின.
அமைதி காக்கும் பணி மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணி என அமைதி காக்கும் கடமைகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) காவோ சூப்பர் முகாமின் அடிப்படை பாதுகாப்பை இலங்கைக் குழு பொறுப்பேற்றது.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் திரு. அதுல்கரி அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், காவே மினுஸ்மா மாவட்ட கிழக்குத் தலைமையகத்திற்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) விஜயம் செய்து, ஐ.நா. அமைதி காக்கும் படைகளால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் காஸ்ட்ரோ முகாம் மாலி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.