26th October 2023 07:03:42 Hours
61 வது காலாட் படையினர் மாத்தறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ளும் நோக்குடன், புதன்கிழமை (ஒக்டோபர் 24) போக்குவரத்து வசதிகளை வழங்கி மற்றுமொரு மனிதாபிமான நிவாரண உதவியினை செய்தனர்.
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்களின் கட்டளையின்படி, 613 வது காலாட் பிரிகேட் படையினர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு உதவியதுடன், அவர்களின் வீட்டு வாசலுக்குச் சென்று அவர்களின் தேவைகளையும் விசாரித்தனர்.