Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st May 2023 20:47:32 Hours

மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இராணுவத்தின் கண்காட்சிக் கூடம்

மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் கண்காட்சியான 'வித்யாபிமானி 2023' ஏப்ரல் 25 தொடக்கம் 27 வரை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற போது இலங்கை இராணுவத்தின் கண்காட்சிக் கூடமும் காணப்பட்டது.

இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.

இராணுவ வீரர்களால் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பயன்படுத்தப்படும் இராணுவ கவச வாகனங்கள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்கள் பற்றிய மாணவர்களின் அறிவையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதற்காக வளாகத்தில் பல கண்காட்சிக் கூடங்களை நிறுவியிருந்தனர்.

கண்காட்சிக்கு முன்னதாக, 613 வது காலாட் பிரிகேடின் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர், இராணுவத்தின் அணிநடை பயிற்றுவிப்பாளர்களை வழங்கியதன் மூலம், பிரதம அதிதி அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு மாணவர்களால் வழங்கப்பட்ட அணிவகுப்பின் வெற்றிகரமான பயிற்சிக்கு தங்கள் நிபுணத்துவ உதவிகளை வழங்கினர்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி இராணுவ ஏற்பாடுகள் மற்றும் ஆதரவான பாத்திரங்களை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.