05th June 2024 15:22:25 Hours
61 வது காலாட் படைப்பிரிவு படையினர் 03 ஜூன் 2024 அன்று மாத்தறை மாவட்டத்தில், குறிப்பாக கட்டுவ, வெள்ளத்தோட்ட மற்றும் தொலேகொட பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணியை மேற்கொண்டனர் 61 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், மீட்பு பணிகளுக்காக இரண்டு படகுகள் பயன்படுத்தப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதும், உணவு மற்றும் உதவி வழங்குவதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த கடினமான காலநிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆதரவைப் வழங்குவதற்கே படையினர் அயராது பாடுபடுகின்றனர்.