12th July 2024 13:22:34 Hours
2024 ஜூலை 06 அன்று மாணிக் ஆற்றில் முதலை தாக்கியதில் காயமடைந்த பக்தர் உயிரிழந்தார். இதற்கமைய மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஆற்றின் குறுக்கே 83 அடி நீள வலை அமைக்கப்பட்டுள்ளது. கடற்படை, பொலிஸ் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் ஆதரவுடன், 12 வது காலாட் படைபிரிவின் தளபதியின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக கதிர்காமம் திருவிழாவின் முக்கிய பங்காளர்களுடன் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்த ஒருங்கிணைந்த பாதுகாப்பு புள்ளி நிறுவப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் திருவிழா பங்கேற்பாளர்களைப் பாதுகாப்பதையும் மேலும் அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.