27th June 2023 21:36:43 Hours
55 வது காலாட் படைப்பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களக் கற்பித்தல் கற்கைநெறிகளைப் பின்பற்றும் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் இணைந்து வழங்கிய பல்வேறு பொழுதுபோக்குத் அம்சங்கள், சனிக்கிழமை (24) கட்டைக்காடு மற்றும் கெவில் பிரதேசங்களின் அழைப்பாளர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றலுடன் 55 காலாட் படைபிரிவு வளாகத்தில் நடைபெற்றது.
இத் திட்டம் 55 வது காலாட் படைபிரிவின் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வகுப்புகளில் ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிப் புலமைகளை நிறைவு செய்த மாணவர்கள் தங்களது மொழி திறன் மற்றும் திறமைகளை அப்பகுதியில் உள்ள பார்வையாளர்களுக்கு வெளிக்காட்டினர். இது யாழ் பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் ஆசியுடன் 55 வது காலாட் படைபிரிவின் தளபதியின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடிய இக்குழந்தைகள் நல்லிணக்கம் மற்றும் இன நல்லிணக்கத்தின் சின்னங்களாக விளங்குவதற்கு சிவில் விவகார ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் கேணல் கேகேடிஆர் சமிந்த அவர்களின் மேற் பார்வையில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஆங்கிலப் பயிற்றுவிப்பாளர் கெப்டன் ஜேஎம்ஜேடி ரணசிங்க அவர்கள் அனைவருக்கும் வழிகாட்டியதுடன் பயிற்சியளித்தார்.
இச் சிறார்கள் ஆங்கிலத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொள்வதற்கும், பெற்றோர்கள் முன்னிலையில் மொழியின் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், மாணவர்களை மொழிப் புலமைக்கு உட்செலுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்நிகழ்வு அரங்கேற்றப்பட்டது.
150க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் பாடல்கள், நாடகங்கள், கவிதைகள், பேச்சுகள் மற்றும் நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து திறமையானவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் தொடர்ந்து சுண்டுக்குளத்தில் நேச்சர் பார்க் விடுமுறை விடுதியில் விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அழைப்பாளர்களும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 552 வது காலாட் பிரிகேட் தளபதி, அருட்தந்தை வண.அமல்ராஜ், கிளிநொச்சி பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. எஸ்எஸ்பீ அஜித் குணரத்ன, மருதங்கேணி பிரதேச செயலாளர் திரு பிரபாகமூர்த்தி, 552 மற்றும் 553 வது பிரிகேட் தளபதிகள் ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வுகளை பார்வையிட்டனர். அரசாங்க அதிகாரிகள், சமூக தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியின் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் மருதங்கேணி பிரதேச செயலாளர் மற்றும் கட்டைக்காடு பங்குத்தந்தையினால் நல்லிணக்கத்திற்காக 55 வது காலாட் படைபிரிவு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டி 55 வது காலாட் படைபிரிவினருக்கு இந்து மத கலாசார முறைப்படி மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.