Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2023 06:11:44 Hours

மாகஸ்தொட்ட பெஸ்டிவல் ஒப் ஸ்பீட் -2023ல் போட்டியில் இராணுவ வீரர்கள் பிரகாசிப்பு

நுவரெலியா, மாகஸ்தொட்டயில் மலை ஏறும் மோட்டார் பாதையில் 2023 ஆண்டு ஏப்ரல் 8 - 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற 'மாகஸ்தொட்ட பெஸ்டிவல் ஒப் ஸ்பீட் - 2023' போட்டியில் இலங்கை இராணுவ மோட்டார் ஸ்போர்ட்ஸ் கழக பங்கேற்பாளர்கள் பலர் நூற்றுக்கணக்கான வீரர்களை தோற்கடித்து கிண்ணங்களை வென்றனர்.

பின்வருவோர் மூன்று போட்டிகளில் பிரகாசித்தனர்:

125 சிசி முதல் 250 சிசி வரையிலான பிரிவில் (ஸ்பீடு டிரெயில் பைக் ஓப்பன் ஈவென்ட்) 3 வது இடத்தைப் பொறியியல் சேவைப் படையணியின் கோப்ரல் ஜேஎம்எஸ் ஜயலத் பெற்றார்.இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கோப்ரல் பூஐ மதுரங்க அவர்கள் எஸ்எம்-சூப்பர் மோட்டார் 250/450 சிசி திறந்த போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றதோடு, ஸ்போர்ட் டூரிங் 600 சிசி திறந்த நிகழ்வில் 3வது இடத்தையும் பெற்றார்.

எஸ்எம்-சூப்பர் மோட்டார் 250/450 சிசி திறந்த போட்டியில் கஜபா படையணியின் சிப்பாய் எல்பிடி செனவிரத்ன 3ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவின் தலைவர் பங்கேற்பாளர்களுக்கு தேவையான வசதிகள், வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.