24th May 2023 23:29:36 Hours
54 வது காலாட் படைப்பிரிவின் படையினர், கடற்படை, விமானப்படை மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் உதவியுடன் மன்னாரில் மாபெரும் சிரமதான திட்டம் வியாழக்கிழமை (18 மே) முன்னெடுக்கப்பட்டது. இதன் போது 20க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், கண்ணாடி போத்தல்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
படையினர், பொதுமக்கள், மாவட்ட செயலகம் மற்றும் மாநகர சபை ஊறுப்பினர்களுடன் இணைந்து கரையோரப் பகுதியிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி போத்தல்கள் இராணுவ டிராக்டர்கள் மூலம் மறுசுழற்சி செய்வதற்காக 542 காலாட் பிரிகேட் தலைமையகத்திற்கு அனுப்பபட்டது. இத் திட்டமானது 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்ஆர்வீஎம்என்டிகேபீ நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய 100 க்கும் மேற்பட்ட படையினரால் முன்னெடுக்கப்பட்டது.