24th December 2024 13:25:25 Hours
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனம், சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்துடன் இணைந்து மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட உயர் பாடநெறி (சிப்பாய்கள்) இல. 29 ஐ 23 டிசம்பர் 2024 அன்று வெற்றிகரமாக முடித்துள்ளது.
2024 நவம்பர் 27 முதல் டிசம்பர் 23 வரை நடாத்தப்பட்ட பாடநெறி மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டம் பற்றிய அறிவை மேம்படுத்தியது. இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.டி.சி சந்தகெலும் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றார்.
கேணல் சட்ட சேவைகள் கேணல் கே.ஏ.பீ. குருப்பு யூஎஸ்பீ அவர்கள் நிறைவுரை ஆற்றியதுடன், இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் எம்.கே.எல்.ஏ டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.