12th May 2023 17:55:46 Hours
மத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்பீபீ தசநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் போதைப்பொருள் பாவனையின் ஆபத்துக்கள் குறித்து தனது படையினரை எச்சரிக்கும் நோக்கத்துடன் புதன்கிழமை (10) தியத்தலாவ தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் விழிப்புணர்வு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரிகேடியர் ஆர்எம்எம் மொனராகல யூஎஸ்பீ மற்றும் வைத்திய அதிகாரிகள் குழுவினர், இராணுவத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல்’ என்ற தலைப்பில் செயலமர்வை நடாத்தினார்.
மத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசம், ஸ்னைப்பர் துப்பாக்கி சூட்டு பயிற்சிப் பாடசாலை மற்றும் மத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் கீழுள்ள படையலகுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 16 அதிகாரிகள் மற்றும் 248 சிப்பாய்கள் நிகழ்வில் பங்கு பற்றினர்.