30th August 2023 19:47:39 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் ஓகஸ்ட் 22 முதல் 24 வரை அதன் வளாகத்தில் படையினரின் தார்மீக காரணிகள் மற்றும் வீரர்களின் மன உறுதியை மையமாகக் கொண்டு மூன்று நாட்கள் செயலமர்வினை ஏற்பாடு செய்தது.
இராணுவ மனநல வைத்திய ஆலோசகர் பிரிகேடியர் (வைத்தியர்) ஆர்எம்எம் மொனராகலை யுஎஸ்பீ அவர்கள் படையினரின் தார்மீக காரணிகள் மற்றும் மன உறுதியை மையமாகக் கொண்டது விரிவுரைகளை நடாத்தினார்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 75 இற்கும் மேற்பட்ட படையினர் செயலமர்வில் பங்குபற்றியதுடன், பட்டறையின் முடிவில் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பீ வீஎஸ்வீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். இதன் போது பணி நிலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.