18th July 2024 20:25:38 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை சிங்க படையணியின் வீரமரணமடைந்த போர் வீரரான லான்ஸ் கோப்ரல் ஜே.ஏ.பீ ரணசிங்க அவர்களின் மகளான ஜே.பீ நயோமி தெடுனு அவர்களுக்கு 14 ஜூலை 2024 அன்று கஹகொல்ல படையலகு பயிற்சிப் பாடசாலையில் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
இந்த முயற்சி பண்டாரவளை சாந்தணி பேக்கர்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைவி திருமதி உதானி அவர்களின் அனுசரணையில் வழங்கப்பட்டதுடன், தற்போது மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருட மாணவியான திருமதி நயோமி தெடுனு அவர்கள் இந்த புலமைப்பரிசிலை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.