Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2023 17:30:33 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 'வெசாக்' வலையம் மற்றும் அன்னதானம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினரின் ஆதரவுடன் பலவிதமான வெசாக் கூடுகள், மற்றும் பல வண்ண அலங்காரங்கள் 'வெசாக்' தினத்தில் கவர்ச்சியையும் வண்ணமயத்தையும் சேர்த்தது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் வெசாக் தினத்தில் (மே 5) பிரதம அதிதியாக கலந்துகொண்டு, தலைமையக வளாகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த 'வெசாக்' வலயத்தை திறந்து வைத்தார். மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்த ஆரம்ப நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வெசாக் தினத்தில் ‘ரொட்டி தானம் வழங்கப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட 'வெசாக்' பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் படையினரின் வெசாக் கூடுகளை காணவும், விருந்தோம்பலில் பங்கு பற்றவும் அங்கு வருகை தந்தனர்.