18th August 2024 16:48:38 Hours
இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தியத்தலாவ மகா வித்தியாலயத்தின் சிரேஷ்ட மாணவர்களுக்கான புத்தக நன்கொடை நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு விரிவுரையை 16 ஆகஸ்ட் 2024 அன்று மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் ஏற்பாடு செய்தது.
இந் நிகழ்வில் பிரத அதிதியாக மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பங்குபற்றினார்.
நிகழ்ச்சியின் போது, கொழும்பு ரோட்டரி கழகத்தின் அனுசரணையுடன் 135 புத்தகப் பொதிகள் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ரோட்டரி சங்கத் தலைவர், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.