Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th May 2023 18:50:46 Hours

மட்டக்களப்பு படையினர் மாவட்ட செயலகத்துடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டம்

23 வது காலாட் படைப்பிரிவின் 231 வது காலாட் பிரிகேட் படையினர், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு பொலிஸாருடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் வண்ணமயமான புத்தாண்டு விழாவை கொண்டாடினர்.

இந்த நிகழ்வு பல கலாசார, மத மற்றும் பல்லினச் சூழலில் பரஸ்பர உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், பொதுமக்கள் மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வுகளில் அதிகமான தமிழ் மற்றும் சிங்கள பொதுமக்கள் கலந்து கொண்டதுடன், புத்தாண்டு கொண்டாட்டமானது, மரதன் ஓட்டப் போட்டி, சைக்கிள் ஓட்டப் போட்டி, படகுப் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், தலையணைச் சண்டை, கயிறு இழுத்தல், புத்தாண்டு இளவரசர் மற்றும் அழகுராணி தேர்வு போன்ற பாரம்பரிய வேடிக்கையான விளையாட்டுக்கள் நடைபெற்றதுடன், இவ்விழாவில் சிங்கள மற்றும் தமிழ் பாரம்பரிய நடனமும் அரங்கேற்றப்பட்டது.

பிரதம அதிதிகளாக 231 வது காலாட் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎம்என்கேடீ பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி, கலாமதி பத்மராஜா, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திரு, உதித் லியனகே ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேச மக்களும் விழாவைக் கண்டுகளித்தனர்.